உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிணற்றில் விழுந்த சிறுவனை காப்பாற்றியவர் பலி

கிணற்றில் விழுந்த சிறுவனை காப்பாற்றியவர் பலி

உளுந்தூர்பேட்டை : கிணற்றில் விழுந்த சிறுவனை காப்பாற்றிய வாலிபர் இறந்தார். விருத்தாசலம் அடுத்த தேவஸ்தானம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை,30. இவரது குடும்பத்தினர் விழுப்புரம் மாவட்டம் எலவனாசூர்கோட்டை அடுத்த அலங்கிரி கிராமத்திற்கு வந்திருந்தனர். நேற்று காலை ஏழுமலை உறவினரின் மகன் ராகுல்காந்தி,14, குளிக்க சென்றபோது பெருமாள் என்பவரது 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்த ஏழுமலை, கிணற்றில் குதித்து ராகுல்காந்தியை காப்பாற்றினார். சற்று நேரத்தில் ஏழுமலை தண்ணீரில் மூழ்கி இறந்தார்.உளுந்தூர்பேட்டை தீயணைப்பு படையினர் விரைந்து சென்று ஏழுமலையின் உடலை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்