உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புனித பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்

புனித பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்

திண்டிவனம் : சாரம் புனித பிரான்சிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.இப்பள்ளியில் தேர்வு எழுதிய 93 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். மாணவி ஹேமமாலினி 553 மதிப்பெண், விஜயலட்சுமி 552, பூஜா 538 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்தனர். 500 மதிப்பெண்ணுக்கு மேல் 23 பேர், 450க்கு மேல் 21 பேர், 400க்கு மேல் 19 பேர் பெற்றுள்ளனர்.தேர்ச்சி சாதனையில் பங்கேற்ற மாணவர்களையும், அவர்களை ஊக்குவித்த ஆசிரியர்களையும், ஒத்துழைப்பு அளித்த பெற்றோர்களையும் பள்ளியின் முதல்வர் அந்தோணிசாமி, தாளாளர் ஜெயராஜ் ஆகியோர் பாராட்டினர்.இந்தாண்டு எல்.கே.ஜி., முதல் 11ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடக்கிறது என பள்ளி முதல்வர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி