| ADDED : மே 13, 2024 05:46 AM
விழுப்புரம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் விழுப்புரம் ஜான்டூயி பள்ளி மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளனர்.இப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவி சகானா 500க்கு 496, பஹிமா 494, ஜெஸ்ரினா பிரெய்சி 489 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். இதில் சகானா, ஜெஸ்ரினா மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.பள்ளியில் கணிதத்தில் 8 பேர், அறிவியலில் ஒருவர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். தமிழில் 2 மாணவிகள் மற்றும் ஆங்கிலத்தில் ஒரு மாணவி, சமூக அறிவியலில் ஒரு மாணவி என 4 மாணவிகள் 99 மதிப்பெண் பெற்றுள்ளனர்.பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளை, தாளாளர் வீரதாஸ், செயலாளர் ெஷர்லி, நிர்வாக அலுவலர் எமர்சன் ராபின், முதன்மைக் கல்வி அலுவலர் சுகன்யா, முதல்வர் ஆஸ்லே கென்னடி, தலைமை ஆசிரியை ஆகியோர் பாராட்டி, பரிசு வழங்கினர். மேலும், பள்ளியின் மாணவர்கள் தேர்ச்சிக்கு பாடுபட்ட ஆசிரியர்களுக்கும், உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும், தாளாளர் பாராட்டு தெரிவித்தார்.