கணக்கில் வராத பண விவகாரம் சார் பதிவாளர் மீது வழக்கு பதிவு
விழுப்புரம்: திண்டிவனம் பத்திரப்பதிவு அலுவலகத்தில், கணக்கில் வாரத பணம் சிக்கிய விவகாரத்தில், சார் பதிவாளர் உட்பட 14 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.திண்டிவனம், சந்தைமேட்டில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அதில், கணக்கில் வராத பணம் ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மற்றும் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் சிக்கியது.இதுதொடர்பாக சார் பதிவாளர் (பொறுப்பு) சித்ரா, ஆவண எழுத்தர்கள் மாணிக்கம், கலீல், முத்திரைத்தாள் விற்பனையாளர் சரவணன் உட்பட 14 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.