உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிடங்கல் ஈஸ்வரன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா

கிடங்கல் ஈஸ்வரன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா

திண்டிவனம் : கிடங்கல் ஈஸ்வரன் கோவிலில் நடந்த ஆடிக்கிருத்திகை விழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.திண்டிவனம், கிடங்கல் (1) அன்பகநாயக ஈஸ்வரர் கோவில் வளாத்தில் உள்ள வள்ளி தெய்வானை உடனுறை ஆறுமுக பெருமான் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு நேற்று முன்தினம் சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் விரதமிருந்த பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிேஷகம் நடந்தது.தொடர்ந்து பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதே போல் செடல் குத்திய பக்தர்கள் ராட்டினம் சுற்றும் நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்