உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பல்லைக்கழக போட்டிகளில் வென்று அரசு கல்லுாரி மாணவர்கள் சாதனை

பல்லைக்கழக போட்டிகளில் வென்று அரசு கல்லுாரி மாணவர்கள் சாதனை

விழுப்புரம்: விழுப்புரம் அரசு கலை கல்லுாரி மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ளனர்.விழுப்புரம் அரசு கலை கல்லுாரி மாணவ, மாணவிகள் 2023-24ம் கல்வியாண்டில், கைப்பந்து, கையுந்து பந்து, கிரிக்கெட், கால்பந்து, கோ-கோ, கபாடி, ஜூடோ, பாக்சிங், டேக்வாண்டோ, பென்காக் சிலாட், இறகு பந்து, மேசை பந்து, சதுரங்கம், மல்லர் கம்பம், கிராஸ் கண்ட்ரி ஆகிய போட்டிகளில் 53 பேர் கலந்து கொண்டனர்.அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் தென்னந்திய அளவில் நடந்த பல்கலைக்கழக போட்டி ஒவ்வொரு விளையாட்டும் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடந்தது. தொடர்ந்து, அசாமில் நடந்த அகில இந்திய பல்கலைக்கழகம் அளவிலான விளையாட்டு போட்டடியில், மல்லர் கம்பத்தில் விழுப்புரம் அரசு கலை கல்லுாரி மாணவிகள் 8வது இடத்தை பிடித்து சாதித்ததோடு, கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் தகுதியை பெற்றுள்ளனர்.தொடர்ந்து நடந்த, கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் ஆண்கள் பிரிவில் 5வது இடத்தையும், பெண்கள் பிரிவில் 7 வது இடத்தையும் பிடித்து கல்லுாரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். போட்டிகளில் வென்று கல்லுாரிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளை, முதல்வர் சிவக்குமார், எஸ்.பி., தீபக் சிவாச், டி.எஸ்.பி., சுரேஷ், வேலுார் மண்டலம் கல்லுாரி கல்வி இணை இயக்குனர் எழிலன், உடற்கல்வி இயக்குனர் ஜோதிப்பிரியா உட்பட துறை தலைவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் பாராட்டி, வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி