விழுப்புரம்: விழுப்புரம் ஆதித்யாவின் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகளில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றனர்.இப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். மாணவர் கோபிநாத் 600க்கு 591, வேல்முருகன் 575, சல்மான்கான் 570 மதிப்பெண் பெற்றனர். இப்பள்ளியில் கணினி அறிவியலில் 6 பேர், வணிகவியலில் 4 பேர், இயற்பியலில் 1 மாணவர் 100க்கு100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.மேலும், 550 மதிப்பெண்ணுக்கு மேல் 8 பேர், 500க்கு மேல் 22 பேர், 450க்கு மேல் 34 பேர் எடுத்துள்ளனர். மொத்தம் 98 சதவீத மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்துள்ளனர். 10ம் வகுப்பில் சென்டம்
பத்தாம் வகுப்பு தேர்வில், மாணவி மோனிஷ் 500க்கு491, ரிஷிதாஸ்ரீ 488, சந்தனாஸ்ரீ 480 மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தனர். கணிதத்தில் 4 பேர், அறிவியலில் ஒருவர் என 5 பேர் 100க்கு100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 450 மதிப்பெண்ணுக்கு மேல் 10 பேர், 400க்கு மேல் 18 பேர், 350க்கு மேல் 21 பேர் பெற்றுள்ளனர். 98 சதவீத மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்தனர்.பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று பெருமை சேர்த்த மாணவ, மாணவியர்களுக்கு, பள்ளி நிறுவனர்ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்து பாராட்டினர். தொடர்ந்து பள்ளியின் அறக்கட்டளை உறுப்பினர் அனுதா பூனமல்லி, பள்ளி முதல்வர் கிருஷ்ணராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.