| ADDED : ஜூலை 09, 2024 11:28 PM
விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத் தேர்தலில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு, மாற்று புகைப்பட அடையாள ஆவணங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்ட தேர்தல் அதிகாரி பழனி செய்திக்குறிப்பு: விக்கிரவாண்டி இடைத் தேர்தலில், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை உள்ளவர்கள், அதன் மூலம் தாங்கள் வசிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடியில் வாக்களிக்கலாம். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இல்லாதவர்கள் அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கு, மாற்று புகைப்பட அடையாள ஆவணங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆதார் அட்டை, தேசிய ஊரக வேலை பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை, ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்.மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான அடையாள அட்டை போன்றவற்றையும் பயன்படுத்தி ஓட்டளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.