உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பள்ளியில் ஆண்டு விழா

அரசு பள்ளியில் ஆண்டு விழா

செஞ்சி: செஞ்சி ஒன்றியம் பாடிப்பள்ளம் அரசு தொடக்க பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளியில் ஆண்டு விழாவிற்கு தலைமை ஆசிரியர் பவானி தலைமை தாங்கினார். மேலாண்மை குழு தலைவர் மல்லிகா முன்னிலை வகித்தார். கண்டாச்சிபுரம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், கணக்கன்குப்பம் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இல்லம் தேடி கல்வி பணியாளர் நிறைமதி மற்றும் மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். உதவி தலைமையாசிரியர் சிறுமலர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை