உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பா.ம.க., நிறுவனர் பிறந்த நாள் விழா

பா.ம.க., நிறுவனர் பிறந்த நாள் விழா

திண்டிவனம்: பா.ம.க., நிறுவனர் ராமதாசின் 86வது பிறந்த நாளை முன்னிட்டு, வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.திண்டிவனம், அவரப்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, பேரவை மாநிலச் செயலாளர் பாலாஜி தலைமை தாங்கி, கட்சிக்கொடியேற்றி இனிப்பு வழங்கினார். தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு எழுது பொருட்களும், தொடர்ந்து மதியம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சஞ்சய்யப்பா, ராகவன், பொன்மொழி முன்னிலை வகித்தனர். வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் கருணாநிதி, மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் சம்பத், பா.ம.க., மாவட்ட செயலாளர் ஜெயராஜ் முன்னாள் நகர செயலாளர்கள் ரமேஷ், சண்முகம், ரவி, ரமேஷ், நகர தலைவர் சவுந்தர், நகர செயலாளர் மணிகண்டன், ராஜி, அருண், மகளிர் அணி கவிதா தனம், குமாரி, மகேஸ்வரி, நிர்வாகிகள் பொன்னுசாமி, செந்தில்குமார் வழக்கறிஞர்கள் ராஜசேகர், விக்னேஷ், மோகன், குமார், விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை