உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோவில் உண்டியல் உடைத்து காணிக்கை திருட்டு

கோவில் உண்டியல் உடைத்து காணிக்கை திருட்டு

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அடுத்த பள்ளித்தென்னல் கிராமத்தில் அரசமரத்து விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.இக்கோவில் கடந்த ஜனவரி மாதம் கும்பாபிேஷகம் நடந்தது. நேற்று காலை, பக்தர்கள் கோவிலுக்கு சென்றபோது, இரும்பினாலான கிரீல் கேட் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே உண்டியல் உடைக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் திருடு போனது தெரியவந்தது.இதுகுறித்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ