உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இரு தரப்பு மோதல் 3 பேர் மீது வழக்கு

இரு தரப்பு மோதல் 3 பேர் மீது வழக்கு

விழுப்புரம் : விழுப்புரம் அருகே இரு தரப்பினர் தாக்கிக் கொண்ட வழக்கில் 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த அய்யூர் அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ரகுபதி, 25; இவர், கடந்த 28ம் தேதி, ஸ்பிளண்டர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அதே கிராமத்தை சேர்ந்த கோபி மகன்கள் கஜபதி, 20; ராவணன், 21; ஆகியோர் புல்லட்டில் வந்தனர்.ரகுபதி அவர்களிடம் வழிவிடுமாறு கேட்ட போது, கோபமடைந்த அவர்கள் ரகுபதி மற்றும் அவரது நண்பர் வாசுதேவன், 40; ஆகிய இருவரையும் திட்டி, தாக்கினர். இதனால், இரு தரப்பினராக தாக்கிக் கொண்டனர்.இரு தரப்பு புகார்களின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் கஜபதி, ராவணன், ரகுபதி ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை