உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சேதமடைந்த பயிர்கள் இணை இயக்குனர் ஆய்வு

சேதமடைந்த பயிர்கள் இணை இயக்குனர் ஆய்வு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வட்டாரத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களை இணை இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தில் சில தினங்களாக பெய்த தொடர் மழையினால் அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த ஏ.டி.எல்., 1 ரக கேழ்வரகு, வேர்க்கடலை, கம்பு ஆகிய பயிர்கள் சேதமடைந்தன. இது பற்றி நேற்றைய 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து நேற்று விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சீனிவாசன் பொன்னங்குப்பம் கிராமத்திற்கு சென்று சேதமடைந்த வயல்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின், விவசாயிகளிடம் மழை சேதம் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்புவதாக உறுதியளித்தார்.வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கங்கா கவுரி, வேளாண்மை அலுவலர் கவிப்பிரியன், உதவி அலுவலர் ராஜா உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி