உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மனவளக்கலை மன்றம் மரக்கன்றுகள் வழங்கல்

மனவளக்கலை மன்றம் மரக்கன்றுகள் வழங்கல்

விழுப்புரம்,: விழுப்புரம் மனவளக்கலை மன்றம் சார்பில் உலக சமுதாய சேவா சங்க நிறுவனர் வேதாத்ரிமகரிஷி 114வது பிறந்தநாளையொட்டி மரக்கன்றுகள் வழங்கினர்விழுப்புரம் அருகே கப்பூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சேகர் வரவேற்றார். உலக சமுதாய சேவா சங்க மண்டல தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் கவுரிராஜா முன்னிலை வகித்தார்.தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் வைஷாலி, துர்காதேவி கலந்துகொண்டு, பொது மக்களுக்கு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, தென்னை, பழ மரக்கன்றுகளை வழங்கினர். மனவளக்கலை மன்றம் தலைவர் கருணாநிதி சிறப்புரை யாற்றினார்.இதில் பாண்டுரங்கன், இளங்கோவடி, ஓசோன்பாதுகாப்பு இயக்கம் ராமர், மனித வள மேம்பாட்டு அறக்கட்டளை தலைவர் தேவராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை