உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பறக்கும் படை சோதனை: பரிசு பொருட்கள் பறிமுதல்

பறக்கும் படை சோதனை: பரிசு பொருட்கள் பறிமுதல்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட சில்வர் பரிசு பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.விக்கிரவாண்டி இடைத் தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரகுராமன் தலைமையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் கப்பியாம்புலியூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, சென்னையிலிருந்து நெய்வேலிக்குச் சென்ற மாருதி ஸ்விப்ட் டிசையர் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணங்களின்றி 160 சில்வர் டிபன் பாக்ஸ், 48 பிளாஸ்க்குகள் கொண்டு சென்றது தெரியவந்தது.விசாரணையில், நெய்வேலியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பதும், பணி ஓய்வு பாராட்டு விழா நிகழ்ச்சிக்கு கொண்டு செல்வதும் தெரியவந்தது.உரிய ஆவணங்கள் இல்லாததால், 32 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்களை பறிமுதல் செய்து, விக்கிரவாண்டி தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார் யுவராஜிடம் ஒப்படைத்தனர். பின், அலுவலக அதிகாரிகள் பொருட்களை சீலிட்டு விழுப்புரம் துணை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை