உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தானிய களமாகும் தார் சாலைகள் இரவு நேர விபத்து அபாயம்

தானிய களமாகும் தார் சாலைகள் இரவு நேர விபத்து அபாயம்

செஞ்சி, : செஞ்சி பகுதியில் கிராம சாலைகளில் தானியங்களை உலர வைப்பவர்கள், இரவில் சாலையிலேயே மூடி இருப்பு வைப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.செஞ்சி, மேல்மலையனுார் ஒன்றியங்களில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை விளை பொருட்களை அடித்து உலர்த்தி காய வைக்க ஒவ்வொரு நிலத்தின் அருகிலும் களத்து மேடு என்ற பகுதியை உருவாக்கி வைத்திருந்தனர்.பின், விவசாயிகளின் வசதிக்காக அரசே பொது இடத்தில் உலர் களங்களை அமைத்தது. இது போன்று உலர் களங்கள் அமைக்கப்பட்ட பின் விவசாய நிலங்களில் தனியாக களத்து மேடு என இடம் ஒதுக்காமல் விட்டு விட்டனர்.தற்போது அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ள உலர் களங்கள் பல இடங்களில் சேதமாகி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அத்துடன் சில கிராமங்களில் போதிய அளவிற்கு உலர் களங்கள் அமைக்கப்படாமல் உள்ளது.இதனால் செஞ்சி பகுதியில் பெரும்பாலான கிராமங்களில் சாலைகளையே உலர்களமாக பயன்படுத்துகின்றனர். பகலில் தானியங்களையும், வைக்கோல்களையும் சாலைகளில் பரப்பி வெயிலில் காய வைக்கின்றனர். இரவில் விளை பொருட்களை வயலுக்கோ, வீட்டிற்கோ கொண்டு செல்லாமல் சாலையிலேயே அடுக்கி மூடி இருப்பு வைக்கின்றனர். அவ்வாறு பொருட்கள் மீது கருங்கற்களையும் அடுக்கி வைக்கின்றனர்.இரவில் வேகமாக வரும் கார், இருசக்கர வாகனங்கள் எதிரே வெளிச்சம் அதிமான வாகனம் வரும் போது எதிரே இருக்கும் தானியங்கள் தெரியாமல் அதன் மீது மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே கிராமங்களில் கூடுதல் தனிய உலர் களங்களை அமைக்க ஒன்றிய நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகள் இரவில் தனியங்களை சாலைகளில் இருப்பு வைப்பதை தடுக்க அந்தந்த பகுதி காவல் நிலைய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

rama adhavan
ஜூன் 25, 2024 02:52

கார், இதர வாகனங்கள் இரவில் மெதுவாகத்தான், சாலையைப் பார்த்து கவனமாகத் தான் கிராம சாலைகளில் செல்லவேண்டும். ஏழை விவசாயீகள் எங்கு செல்வார்கள்? நமக்கு உணவு தரும் அவர்கள் சிறிது காலம் தானே சாலையை உபயோகிக்கிறார்கள். நெடுஞ்சாலைகளில் எவ்ளோ தடுப்பு போலீஸ் போட்டுள்ளது. கார்கள் கவனமாகத்தானே செல்கின்றன?


Sainathan Veeraraghavan
ஜூன் 24, 2024 16:00

போலீஸ் என்ன செயகிறது. நெடுஞ்சாலை துறை அமைச்சர் தூக்கத்தில் உள்ளாரா. இந்த தானியங்களை பறிமுதல் செயது விட்டாலே தன்னாலேயே திருந்துவார்கள்.


rama adhavan
ஜூன் 25, 2024 02:56

தவறான கருத்து. விவசாயி விளை பொருளை பறிமுதல் செய்வதா? உங்களுக்கு மனசாட்சி இல்லையா?


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை