| ADDED : மே 13, 2024 05:40 AM
விழுப்புரம்: தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், பிளஸ் 2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான 'கல்லுாரி கனவு' எனும் உயர்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி விழுப்புரத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசியதாவது:தமிழ்நாடு அரசு கடந்த 3 ஆண்டுகளாக ஏழை, எளிய மாணவர்களும் உயர்கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில், நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி கனவை நிறைவேற்றும் வகையில், இத்திட்டத்தின் மூலம் உயர்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சட்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, திறன் பயிற்சிகள் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த கல்வியாளர்கள், வல்லுநர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உயர்கல்வி குறித்து விரிவாக வழிகாட்டுதல்கள் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.விழுப்புரம் மாவட்டத்தில் 80 சதவீத மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். அரசின் பல்வேறு திட்டங்களைப் பயன்படுத்தி, மாணவர்கள் உயர்கல்வி பயின்று வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரு தன்ஜெய் நாராயணன், சி.இ.ஓ., அறிவழகன், திறன்மேம்பாட்டுக் கழக உதவி இயக்குனர் அருண்குமார், அரசு சட்டக் கல் லுாரி முதல்வர் கிருஷ்ண லீலா உட்பட பலர் பங்கேற்றனர்.