மேலும் செய்திகள்
தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி
16 hour(s) ago
ஒன்றிய அலுவலக கட்டுமான பணி: சேர்மன் ஆய்வு
16 hour(s) ago
கண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
16 hour(s) ago
அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
16 hour(s) ago
விழுப்புரம்,: விழுப்புரம் சட்டசபை தொகுதியில் மக்களோடு முதல்வர் திட்ட முகாம் தி.மு.க., கோஷ்டி பூசல் பிரச்னைகளால் மக்களிடம் சரியாக சென்று சேராத நிலையில் உள்ளது.தமிழகத்தில் சுகாதாரம், மின்சாரம், ஊரக வளர்ச்சி, குடிமை பொருள் உட்பட 15 துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள், இந்த துறைகள் சார்ந்த மக்களின் கோரிக்கைகளை நேரடி மனுவாக பெற்று உடனடி தீர்வு காணும் வகையில், முதல்வர் ஸ்டாலின், மக்களோடு முதல்வர் திட்ட முகாமை நடைமுறை படுத்தினார்.இந்த முகாம், விழுப்புரம் சட்டசபை தொகுதியில், தி.மு.க., பிரமுகர்களின் கோஷ்டி பூசல் பிரச்னையால், இங்குள்ள மக்களுக்கு பயன்படாத நிலையில் உள்ளது. சமீபத்தில், விழுப்புரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மக்களோடு முதல்வர் திட்ட முகாம் பஞ்சமாதேவி அருகேவுள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது.இதில், லட்சுமணன் எம்.எல்.ஏ., பங்கேற்று மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த முகாம், மழவராயனுார், செங்காடு, சாலையாம்பாளையம் கிராமங்களுக்கு நடந்த நிலையில், அமைச்சர் பொன்முடியின் தீவிர ஆதரவாளரான மழவராயனுார் ஊராட்சி தலைவர் சிவகாமி முகாமில் பங்கேற்கவில்லை. இதனால், இந்த ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பலரும் இதில் பங்கேற்கவில்லை.விழுப்புரம் தொகுதியில், தி.மு.க., பிரமுகர்களின் கோஷ்டி பூசல் பிரச்னையால் மக்களோடு முதல்வர் திட்ட முகாம் முழுமையாக பயன்படாத நிலை ஏற்பட்டுள்ளது.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago