உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காமதேனு லயன்ஸ் சங்க ஆண்டு சேவை பணி ஏற்பு விழா

காமதேனு லயன்ஸ் சங்க ஆண்டு சேவை பணி ஏற்பு விழா

திருவெண்ணெய்நல்லுார்: பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் கீழ் செயல்படும் விழுப்புரம் காமதேனு லயன்ஸ் சங்கம் சார்பாக, 15 ஆம் ஆண்டு சேவை பணி ஏற்பு விழா நடந்தது. விழுப்புரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவிற்கு தலைவர் ஜெயராமன் தலைமை தங்கினார். ஜி.எல்.டி., ஒருங்கிணைப்பாளர் வாதேவன் வரவேற்றார். முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் செல்வ காந்தி, ராஜன், தணிகாசலம், அசோக் குமார் சோரடியா, ராஜலக்ஷ்மி செல்வகாந்தி, மாதவ ராஜூ, பொன்னுராம் பரமகுரு, சரவணன், கீதா கமலக்கண்ணன், சுரேஷ் நீலகண்டன், சிவக்குமார் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். ராஜா சுப்பிரமணியம், விஜயலட்சுமி சிவக்குமார் ஆகியோர் புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தி சிறப்புரையாற்றினர்.மேலும், மாவட்ட மாநாடுகள் நடைமுறை தலைவர் அகர்சந்த் சோரடியா சேவை பணிகளை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அவைதலைவர் ஜெயஸ்ரீ முருகேசன், அவை பொருளாளர் ராஜபிரகாஷ் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி குறித்து பேசினர். விழுப்புரம் காமதேனு லயன்ஸ் சங்கத்தின் 2024 - -25 ஆண்டிற்கான தலைவராக தமிழ் செல்வன், செயலாளராக விஜயசாந்தி, பொருளாளராக ராதாகிருஷ்ணன் ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர். விழாவில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, உணவு பொருட்கள் மற்றும் குடை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. விழுப்புரம், சிதம்பரம் உள்ளிட்ட 69 லயன்ஸ் அமைப்புகள் பங்கேற்றனர். புதிய தலைவர் தமிழ்செல்வன், விஜயசாந்தி ஆகியோர் நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி