உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சக தொழிலாளியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

சக தொழிலாளியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

விழுப்புரம்:செஞ்சி அருகே கூலித் தொழிலாளியை கொலை செய்த வழக்கில், சக தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட் தீர்ப்பளித்தது.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த பனமலை மதுரா மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர், 45; கூலித் தொழிலாளி. உமையாள்புரத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 34. இருவரும், 2016ம் ஆண்டு நவ., 132ல் பனமலை மதுரா ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கும் வேலை செய்தனர்.அப்போது, இருவருக்கும் இடையே கூலி தொடர்பாக தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி கத்தியால் சேகரை குத்தினார். பலத்த காயமடைந்த சேகர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.இதுகுறித்து, அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்து சத்தியமூர்த்தியை கைது செய்தனர்.இந்த வழக்கு விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு வழக்கறிஞர் கோதண்டபானி ஆஜரானார்.சத்தியமூர்த்திக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பாக்கியஜோதி தீர்ப்பளித்தார்.கடலுார் மத்தியச் சிறையில் சத்தியமூர்த்தி அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை