மேலும் செய்திகள்
நாளை மின்தடை
40 minutes ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
41 minutes ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
41 minutes ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
41 minutes ago
விழுப்புரம்: விழுப்புரம் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில், பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் 'வாட்ச் டவர்' அமைத்து கண்காணித்து வருகின்றனர்.விழுப்புரம் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையமான, விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு அண்ணா கலைக்கல்லுாரி மையத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், வானுார், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய 6 சட்டசபை தொகுதிகளுக்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள், தனித்தனியாக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த மையத்தில், மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பும், கண்காணிப்பு கேமரா மூலம், கண்காணிப்பு அறையிலிருந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு பணியில், ஏ.டி.எஸ்.பி., தலைமையில், துணை ராணுவத்தினர், தமிழ்நாடு ஆயுதப்படை போலீசார், உள்ளூர் போலீசார் என 207 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.ஓட்டு எண்ணும் மையத்தின் கண்காணிப்பு பணியை, மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பழனி, எஸ்.பி., தீபக்சிவாச் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.ஸ்டிராங் ரூம் முன், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும், வளாகத்தில் ஆயுதப்படை போலீசாரும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மையத்தின் வெளியே பின் பகுதியிலும், பக்கவாட்டு பகுதியிலும் உயரமான 'வாட்ச் டவர்கள்' வைத்து, உள்ளூர் போலீசார், சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர்.
40 minutes ago
41 minutes ago
41 minutes ago
41 minutes ago