மேலும் செய்திகள்
நாளை மின்தடை
4 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
4 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
4 hour(s) ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
4 hour(s) ago
செஞ்சி, : செஞ்சி நகரில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவாதல் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். செஞ்சி நகரம் காடு மலைகளை ஒட்டி உள்ள நகரம். இதனால் செஞ்சி நகரில் குரங்குகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து. ஏராளமான பொது மக்களை கடித்து குதறின. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் முதல் குரங்கு கடிக்கு ஆளாகினர். இதையடுத்து பேரூராட்சியும் வனத்துறையும் இணைந்து குரங்குகளை கூண்டு வைத்து பிடித்தனர். இதன் பிறகு குரங்குகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இதன் பிறகு பல ஆண்டுகளாக குரங்குகளை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் மீண்டும் குரங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து விட்டது. வீடுகளில் உள்ளே புகுந்து உணவு பொருட்களை சூறையாடி விடுகின்றன. வீட்டில் துணி உலர்த்த முடியவில்லை. விலை உயர்ந்த துணிகளை வீணாக்கிவிடுகின்றன. தானியங்களை காய வைக்கவும், வத்தல், வடகம் போடவும் முடிவதில்லை. இரு சக்கர வாகனங்களின் சீட் கவர்களையும் கிழித்து விடுகின்றன. சிறுவர்கள், குழந்தைகள் கையில் உணவு பொருட்கள் இருந்தால் உடனே பிடுங்கி செல்கின்றன. பெரியவர்கள் குரங்குகளை விரட்டினாலும் கடிக்க துரத்தி வருகின்றன. செஞ்சியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குரங்குகளால் பொது மக்களின் உடமைகளுக்கு மட்டுமின்றி உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து செஞ்சியில் குரங்குகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago