உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அவலுார்பேட்டையில் பங்குனி உத்திர விழா

அவலுார்பேட்டையில் பங்குனி உத்திர விழா

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை, சித்தகிரி முருகன் கோவிலில், பங்குனி உத்திர விழா நடந்தது.விழா கடந்த 15ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை மூலவருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து சக்திவேல் காவடி அபிஷேகம், அர்ச்சனை மகா தீபாரதனையும், காவடி மற்றும் சேவார்த்திகள் ஊர்வலமும் நடந்தது.மலை அடிவாரத்திலிருந்து 250க்கும் மேற்பட்ட பக்தர்கள் முதுகில் அலகு அணிந்து புஷ்ப ரத தேர், டிராக்டர், மாட்டு வண்டி மற்றும் கல் உருளைகளை இழுத்து ஊர்வலமாகச் சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர்.மதியம் ஆன்மிக சொற்பொழிவும், மாலையில் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியும், இரவு வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவும் நடந்தது.அமைச்சர் மஸ்தான், ஊராட்சி தலைவர் செல்வம், ஒன்றிய சேர்மன் கண்மணி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் செல்வராஜ், துணைச் சேர்மன் விஜயலட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி சுப்ரமணியன், செல்வி ராமசரவணன், ஒன்றிய கவுன்சிலர் ஷாகின்அர்ஷத்.துணைத் தலைவர் சரோஜா அய்யப்பன், முன்னாள் தலைவர்கள் நடராஜன், கலா ராஜவேலாயுதம், அறங்காவலர் குழு தலைவர் சுதாசெல்வம், அறங்காவலர்கர்கள் லதாமுரளி, விவேகானந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை