உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாலிபருக்கு கத்தி வெட்டு போலீசார் விசாரணை

வாலிபருக்கு கத்தி வெட்டு போலீசார் விசாரணை

வானூர்: கிளியனூர் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஒருவரை கத்தியால் வெட்டிய வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.திண்டிவனம் சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் குப்புலிங்கம் மகன் ஏழுமலை, 27; இவருக்கும் திண்டிவனம் கிடங்கல்(1)பகுதியை சேர்ந்த சுரேஷ், 26; என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக கடந்த 22ம் தேதி இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த 23ம் தேதி ஏழுமலை, கிளியனூர் அடுத்த எறையானூர் தனியார் பள்ளி அருகில் தனது குழந்தைகளை அழைத்து வருவதற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த சுரேஷிக்கும், ஏழுமலைக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த சுரேஷ், கத்தியால் ஏழுமலையை மார்பில் வெட்டியுள்ளார். அதில் பலத்த காயமடைந்த ஏழுமலை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ஏழுமலை கொடுத்துள்ள புகாரின் பேரில் கிளியனூர் போலீசார் சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி