உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மக்கள் தொகை தின விழிப்புணர்வு

மக்கள் தொகை தின விழிப்புணர்வு

விழுப்புரம்: கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில், ஆரம்ப சுகாதார மையத்தில் நேற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களை கவுரவிக்கும் வகையில், நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் பிரியா பத்மாசினி தலைமை தாங்கினார். பொது சுகாதார நிபுணர் நிஷாந்த், வட்டார சுகாதார புள்ளியலாளர் ஜெயவேல் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில், 53 தாய்மார்களுக்கு தலா 10 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ மாதுளம் பழம் வழங்கப்பட்டது.குடும்ப அறுவை சிகிச்சை வாரத்தையொட்டி, ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மகப்பேறு மருத்துவர் சசிரேகா, மயக்கவியல் மருத்துவர் சரண்யா மற்றும் பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை