உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம்

பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம்

விழுப்புரம் : பொது விநியோக திட்டத்தின் கீழ் குறைகேட்பு முகாம் விழுப்புரத்தில் நடந்தது.தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, தனி தாசில்தார் ரகுராமன் தலைமை தாங்கினார். முதுநிலை வருவாய் ஆய்வாளர் கண்ணன், தனி வருவாய் ஆய்வாளர் லட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தனர்.நேற்று காலை 9:00 மணியிலிருந்து மதியம் 2:00 மணி வரை நடந்த முகாமில், ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், குடும்ப உறுப்பினர் நீக்கம், பெயர் சேர்த்தல், நகல் அட்டை, மொபைல் எண் இணைப்பு கோரி 9 மனுக்கள் பெறப்பட்டன.இந்த மனுக்களை, ஆய்வு செய்து, விரைவாக மனு மீதான கோரிக்கையை பூர்த்தி செய்வதாக தனிதாசில்தார், மனுதாரர்களிடம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை