உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திந்திரிணீஸ்வரர் கோவிலில் மழைநீர்

திந்திரிணீஸ்வரர் கோவிலில் மழைநீர்

திண்டிவனம்: திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலுக்குள் மழை நீர் புகுந்ததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வழிந்தோடியது. திந்திரிணீஸ்வரர் கோவில் நுழைவு வாயிலில் பக்தர்கள் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு குளம் போல் தேங்கியது.இதனால் பக்தர்கள் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.ஒவ்வொரு மழையின் போதும் திந்திரிணீஸ்வரர் கோவில் நுழைவு வாயிலில் மழை நீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. மழை நீர் தேங்காமல் இருப்பதற்கு இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தேவையான நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை