உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / டிராக்டர் மீது ஸ்கூட்டர் மோதி தாய் கண்ணெதிரே மகன் பலி

டிராக்டர் மீது ஸ்கூட்டர் மோதி தாய் கண்ணெதிரே மகன் பலி

விக்கிரவாண்டி: கரும்பு டிராக்டர் மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் தாய் கண்ணெதிரே மகன் இறந்தார்.கஞ்சனுார் அடுத்த கொரளூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் - சந்தியா, 34; தம்பதி மகன் அரவிந்த், 19; இவர், நேற்று காலை 6:00 மணியளவில் சந்தியா, அரவிந்த் இருவரும் ஸ்கூட்டரில் வாக்கூர் நோக்கிச் சென்றனர். ஸ்கூட்டரை அரவிந்த் ஓட்டினார். 6:30 மணியளவில் பூண்டி அருகே சென்ற போது முன்னால் சென்ற கரும்பு டிராக்டர் மீது ஸ்கூட்டர் மோதியது.இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே சந்தியா கண்ணெதிரே படுகாயமடைந்த அரவிந்த் இறந்தார். சிறு காயங்களுடன் உயிர் தப்பிய சந்தியா முண்டியம்பாக்கம் அரசுமருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.விபத்து குறித்து கஞ்சனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி