உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பஸ் நடத்துனரிடம் வழிப்பறி; மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

அரசு பஸ் நடத்துனரிடம் வழிப்பறி; மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே நள்ளிரவில் தனியாக பைக்கில் சென்ற அரசு பஸ் கண்டக்டரிடம் பணம் செல் போன் ஆகியவற்றை வழிப்பறி செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.விக்கிரவாண்டி அடுத்த முட்டத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்காரம் மகன் முத்துகிருஷ்ணன், 46; அரசு பஸ் கண்டக்டர். இவர் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு விழுப்புரத்திலிருந்து தனது பைக்கில் வீடு திரும்பினார்.அதிகாலை ஒரு மணி அளவில் முட்டத்துார் ஆஞ்சநேயர் கோவில் அருகே வரும்போது அடையாளம் தெரியாத நான்கு பேர் பைக்கில் வந்து வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி முத்துகிருஷ்ணனிடமிருந்து ரொக்க பணம் ரூபாய் 6 ஆயிரம் செல்போன் மற்றும் வாட்சை பறித்து சென்றனர்.முத்துகிருஷ்ணன் புகாரின் பேரில் கஞ்சனுார் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை