உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு நீச்சல் குளத்தில் பயிற்சி பெற மாணவர்கள் ஆர்வம்

அரசு நீச்சல் குளத்தில் பயிற்சி பெற மாணவர்கள் ஆர்வம்

விழுப்புரம் : விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட நீச்சல் குளத்தில் மாணவ, மாணவிகள் ஆர்வத்தோடு நீச்சல் பயிற்சி கற்று வருகின்றனர்.விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட நீச்சல் குளம் உள்ளது. இங்கு, நீச்சல் கற்றுக் கொள்ளும் திட்டம் மற்றும் அதற்கான அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் சிறுவர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கான நீச்சல் பயிற்சி துவங்கியது.முதல் கட்டமாக 12 நாட்கள் நடந்த பயிற்சியில் 11 பேர் பயிற்சி பெற்றனர். 2ம் கட்ட பயிற்சியில் 29 பேரும், 3ம் கட்ட பயிற்சியில் 70 பேரும் பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சி முடிவில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் நீச்சல் பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த நீச்சல் பயிற்சியை, தற்போது அதிகமான மாணவர்கள் ஆர்வத்தோடு கற்று வருகின்றனர்.மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமாரி கூறுகையில், 'விழுப்புரம் அரசு நீச்சல் குளத்தில் தற்போது மாணவ, மாணவிகள் அதிகமானோர் நீச்சல் பயிற்சி பெற்று வருகின்றனர்.முதல் கட்ட பயிற்சியில் பங்கேற்ற நிறைய பேர், தொடர்ந்து 2ம் கட்ட பயிற்சிக்கு வருவதோடு மட்டுமின்றி, அவர்களின் பெற்றோரும் ஆர்வத்தோடு, குறைந்த கட்டணத்தில் நீச்சல் பயிற்சி பெறுகின்றனர். வயதானோருக்கு மட்டும், மருத்துவ சான்று பெற்று வந்தால், நீச்சல் பயிற்சி இங்கு கற்றுத்தரப்படுகிறது. குறைந்த கட்டணத்தில் அரசு நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சியை மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோர்களும் அதிகளவில் பெற்று வருகின்றனர்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை