உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விளையாட்டு போட்டிக்கு வெளியூர் செல்லும் மாணவர்கள் அவதி

விளையாட்டு போட்டிக்கு வெளியூர் செல்லும் மாணவர்கள் அவதி

விழுப்புரம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு, தனியார் கல்லுாரிகள் அண்ணாமலை பல்கலைகழகத்தின் கீழ் இயங்கி வருகிறது.இங்கு படிக்கும் மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் பல்கலைக்கழகம் அளவிலான போட்டிகளுக்கு வெளியூர் செல்லும் போது, பல இடையூறுகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேவையான பயணப்படி, சீருடைகளை பல்கலைக்கழகம் மூலம் வழங்காமல் உள்ளனர். எனவே விளையாட்டு துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தரவேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பாக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி