உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குடிக்க பணம் தராததால் வாலிபர் தற்கொலை

குடிக்க பணம் தராததால் வாலிபர் தற்கொலை

திண்டிவனம் : திண்டிவனம் அருகே தாய் குடிப்பதற்கு பணம் தர மறுத்ததால், மகன் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.திண்டிவனம் அடுத்த சாரம், குறுக்குத்தெருவில் வசிப்பவர் ஆனந்தி. இவரது மகன் வசந்தகுமார், 23; கூலி வேலை செய்பவர். குடிப்பழக்கம் உள்ள வசந்தகுமார், நேற்று முன்தினம் மாலை தாய் ஆனந்தியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்தார். அவர், பணம் தர மறுத்தார்.இதில் விரக்கியடைந்த வசந்தகுமார் வீட்டில் துாக்குப் போட்டுக் கொண்டார். அவரை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை