உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஸ்டுடியோவில் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

ஸ்டுடியோவில் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

விழுப்புரம்: விழுப்புரத்தில் போட்டோ ஸ்டுடியோ பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள கேமராவை மர்ம நபர்கள் திருடி சென்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, சண்முகபுரம் காலனியை சேர்ந்தவர் வேலு. அப்பகுதியில் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார். இவர், நேற்று முன்தினம் இரவு 9.00 மணிக்கு ஸ்டுடியோவை பூட்டி கொண்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, முன்பக்க ெஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, ரூ.1 லட்சம் மதிப்புள்ள கேமரா உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. புகாரின்பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தடய அறிவியல் நிபுணர்கள் தடயங்கள் சேகரித்தனர்.விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து ஸ்டியோவில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை