உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / த.வெ.க., தலைவர் பிறந்தநாள் விழா

த.வெ.க., தலைவர் பிறந்தநாள் விழா

விழுப்புரம், : தமிழக வெற்றிக்கழக தலைவர், நடிகர் விஜய் 50வது பிறந்த நாள் விழா விழுப்புரத்தில் கொண்டாடப்பட்டது.அதனையொட்டி, விழுப்புரம் ரயிலடி செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அர்ச்சனை நடந்தது. மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ் தலைமையில் நிர்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.தொடர்ந்து,பொதுமக்களுக்கு அன்னதானமும், வேலா மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் காலை உணவும் வழங்கப்பட்டது.பின், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரதீப்ராஜ், நகர இளைஞரணி தலைவர் பாலவிக்னேஷ், கோலியனுார் ஒன்றிய இளைஞரணி தலைவர்கள் பிரபு, சுரேஷ், ஒலக்கூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் மணிகண்டன், மரக்காணம் ஒன்றிய இளைஞரணி தலைவர் சுமன்ராஜ், முகையூர் ஒன்றிய இளைஞரணி துணைத் தலைவர் புருஷோத், சிவா, இஜாஸ், ராபின், அக்ரம், நவீன்குமார், பர்ஹான் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி