உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மரத்தில் வேன் மோதி ஒருவர் பலி

மரத்தில் வேன் மோதி ஒருவர் பலி

அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை அருகே மரத்தில் வேன் மோதி ஒருவர் இறந்தார்.செங்கல்பட்டு மாவட்டம், காயார் கிராமத்தைச் சேர்ந்தவர் பசுபதி, 53; இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 1:30 மணிக்கு இவரது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம், வேடந்தவாடியிலிருந்து மினி சரக்கு வேனில் வாசல்கால் , கதவு ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டு நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.சேத்பட் சாலை குந்தலம்பட்டில் சாலையில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பனைமரத்தில் மோதியது.இதில் படுகாயமடைந்த பசுபதி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை