விழுப்புரம் : விழுப்புரம் வி.சி., வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து, கோலியனுார் பகுதியில் லட்சுமணன் எம்.எல்.ஏ., ஓட்டு சேகரித்தார்.கோலியனுார் ஒன்றியம் ஆனாங்கூர், பில்லுார், காவணிப்பாக்கம், சித்தாத்துார், கண்டமானடி, வி.அரியலுார், குளத்துார், ஏ.கே.குச்சிப்பாளையம், அரசமங்கலம், சேர்ந்தனுார், தென்குச்சிப்பாளையம், தளவானுார், திருப்பாச்சனுார் கிராமங்களில், தி.மு.க., மாநில மருத்துவரணி இணைச் செயலாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., பானை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பேசுகையில், 'தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், கலைஞர் உரிமைத் தொகையாக மாதம்தோறும் ஒரு கோடியே 16 லட்சம் பேருக்கு, தலா 1000 ரூபாய் வழங்கி வருகிறார். மேலும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்திட, முதல்வர் ஸ்டாலின் ஆசி பெற்ற பானை சின்னத்தில் மக்கள் ஓட்டளிக்க வேண்டும்' என்றார்.தி.மு.க., ஒன்றிய செயலாளர் முருகவேல், சேர்மன் சச்சிதானந்தம், மாவட்ட கவுன்சிலர் தமிழ்ச்செல்வி கேசவன், ஊராட்சி தலைவர் பாரதி தட்சணாமூர்த்தி, கிளை நிர்வாகிகள் அர்ஜூனன், ராமதாஸ், ராஜேந்திரன், சதாசிவம், சேகர், கார்த்திகேயன், அமுலு, பாண்டுரங்கன், சேகர், பாலசுந்தரம், முருகவேல்.முன்னாள் கூட்டுறவு வங்கித் தலைவர் மணி, விவசாய தொழிலாளர் அணி தவமணி, வி.சி., மாவட்ட செயலாளர் பெரியார், கவுன்சிலர் முகிலன், ம.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜா, கவுன்சிலர்கள் மணி, மணவாளன், பானாம்பட்டு பழனி மற்றும் கிளை நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.