உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நகராட்சி நிர்வாக பணியிடங்கள் நிரப்புவதற்கான எழுத்து தேர்வு

நகராட்சி நிர்வாக பணியிடங்கள் நிரப்புவதற்கான எழுத்து தேர்வு

விழுப்புரம்: விழுப்புரத்தில் நகராட்சி நிர்வாக பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நடந்தது.தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் சிவில், எலக்ட்ரிக்கல் இன்ஜினியர், நகர திட்டமிடல் அலுவலர், சுகாதார ஆய்வாளர், வரைவாளர் என 2,455 காலி பணியிடங்கள் உள்ளது.இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் எழுத்து தேர்வு நேற்று முன்தினம் தமிழகத்தில் நடந்தது.விழுப்புரம் மாவட்டத்தில், காகுப்பம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரி, விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லுாரி ஆகிய மையங்களில் தேர்வு நடந்தது.தேர்வில் 2000 பேர் பங்கேற்று எழுதினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை