உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கால்களை இழந்த வாலிபர் அரசு வேலை கேட்டு மனு

கால்களை இழந்த வாலிபர் அரசு வேலை கேட்டு மனு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மின்சாரம் தாக்கி, கால்களை இழந்த மகனுக்கு, அரசு வேலை வழங்குமாறு பெற்றோர் கோரிக்கை மனு அளித்தனர்.விழுப்புரம் அடுத்த சோழம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் பூபாலன், 17; இவர், அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மொட்டை மாடிக்கு சென்றபோது, உயர் அழுத்த மின் கம்பி உரசியதில், பலத்த காயமடைந்தார்.சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவரது 2 கால்களும் முழங்காலுக்கு கீழே அகற்றப்பட்டன.இந்நிலையில், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தனது பெற்றோருடன் வந்த பூபாலன் கலெக்டர் பழனியை சந்தித்து மனு அளித்தார். அப்போது அவரது பெற்றோர், மின்சாரம் தாக்கியதில் கால்களை இழந்த எனது மகன் பூபாலன், ஐ.டி.ஐ., படித்துள்ளார். அவரது எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.மேலும், பூபாலனுக்கு விபத்து நஷ்ட ஈடு, மருத்துவ உபகரணங்கள், அரசு வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழக சிறுபான்மையினர் மற்றும் அமைச்சர் மஸ்தானிமும் மனு அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை