மேலும் செய்திகள்
எஸ்.ஐ.ஆர்., பணி : கலெக்டர் ஆய்வு
2 minutes ago
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்
30 minutes ago
குடும்ப தகராறில் பெண் தற்கொலை
21 hour(s) ago
விழுப்புரம்: மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் முகாம் நடக்கிறது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஆதார் அட்டை பெறுதல், புதுப்பித்தல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளும் சேவைகளுக்காக வரும் 26ம் தேதி வல்லம் ஒன்றியம், தளவானுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், 27ம் தேதி விக்கிரவாண்டி ஒன்றியம் சிந்தாமணி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 28ம் தேதி காணை ஒன்றியம் அதனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியிலும் ஆதார் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம்களில் ஒரு ஆண்டிற்கு மாணவர்களிடமிருந்து எவ்வித சேவைக் கட்டணமும் பெறப்படாது. மாணவ, மாணவியர்கள் ஆதார் தொடர்பாக தங்களுக்கு தேவையான சேவைகளைப் பெற்று பயனடையலாம். மற்ற இடங்களில் முகாம் நடக்கும் விவரம் பின்னர் தெரிவிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
2 minutes ago
30 minutes ago
21 hour(s) ago