உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  குவாரிகளில் விதிமுறை மீறினால் நடவடிக்கை: டி.எஸ்.பி., எச்சரிக்கை

 குவாரிகளில் விதிமுறை மீறினால் நடவடிக்கை: டி.எஸ்.பி., எச்சரிக்கை

வானுார்: 'கல் குவாரிகளில் விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என டி.எஸ்.பி., எச்சரித்துள்ளார். வானுார் அடுத்த எறையூர், திருவக்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான கல் குவாரிகள் மற்றும் கிரஷர் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற் சாலைகளில் இருந்து வரும் டிப்பர் லாரிகளால் ஏற்படும் விபத்துகளை குறைப்பது குறித்து கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., ரூபன்குமார் தலைமையில் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வானுாரில் நடந்தது. இன்ஸ்பெக்டர் சத்யா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் டி.எஸ்.பி., பேசுகையில், குவாரிகளுக்கு உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அதிக லோடுகளை ஏற்றிச் செல்லக்கூடாது. பள்ளி நேரங்களில் காலை 8:00 மணி முதல் 10;00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் 6;00 மணி வரை லாரியை இயக்கக்கூடாது. ஒவ்வொரு உரிமையாளர்களும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை