உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

செஞ்சி : செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.மாசு கட்டுப்பாட்டு வாரியம், பள்ளி கல்வித்துறை, தேசிய பசுமைப்படை சார்பில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு, தலைமையாசிரியர் கணபதி தலைமை தாங்கினார். கிரீன் பீலோ மாவட்ட பசுமை தோழி பவித்ரா முன்னிலை வகித்தார். பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன் வரவேற்றார்.மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் பிரபாகரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மாணிக்கம் ஊர்வலத்தைத் துவக்கி வைத்தனர்.ஊர்வலத்தில், தேசிய பசுமைப் படை, என்.சி.சி., நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று, காந்தி பஜார், திண்டிவனம் சாலை வழியாக மஞ்சள் பையை பயன்படுத்த வலியுறுத்திச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை