| ADDED : ஜன 24, 2024 04:22 AM
விழுப்புரம் : குடியரசு தினத்தையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் போலீசார் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர்.குடியரசு தினவிழா வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதனையொட்டி, பொதுமக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், பஸ், ரயில் நிலையங்களில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.மேலும், வெடிகுண்டுகளை கண்டறியும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் முக்கிய இடங்களில் மோப்ப நாய் ராணி மூலம் சோதனை நடத்தினர்.மேலும், லாட்ஜ், தங்கும் விடுதிகளில் சோதனை நடத்திய போலீசார் சந்தேக நபர்களை கண்டறிந்தால் அருகே உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தினர்.மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகன சோதனை யிலும் ஈடுபட்டு வருகின்றனர். செஞ்சியில் பஸ் நிலையம், செஞ்சி கோட்டை, கூட்ரோடு ஆகிய இடங்களில் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டருடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.எஸ்.பி., தீபக்சிவாச் தலைமையில் 1,200 போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.