உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

திண்டிவனம் : திண்டிவனத்தில் மின்சாரம் தாக்கி 4ம் வகுப்பு மாணவர் இறந்தார்.திண்டிவனம், பெலாக்குப்பம் ரோடு, பாரதிதாசன் பேட்டையைச் சேர்ந்தவர் மாரி. கூலித்தொழிலாளி. இவரது மகன் தேவா, 9; குஷால்சந்த் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார்.இவர், நேற்று மாலை 5:45 மணியளவில் வீட்டின் அருகே உள்ள நகராட்சி மினி டேங்க்கில் தண்ணீர் பிடிக்கச் சென்றார்.குழாயில் தண்ணீர் வராததால், அங்குள்ள மின் மோட்டாரின் சுவிட்ச்சை போட்டபோது மின்சாரம் தாக்கியது.மயங்கி விழுந்த சிறுவன் தேவாவை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.இதுகுறித்து ரோஷணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை