உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பழுதடைந்த நீர் தேக்க தொட்டி  

பழுதடைந்த நீர் தேக்க தொட்டி  

திண்டிவனம்; இடிந்து விழும் நிலையிலுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அப்புறப்படுத்திவிட்டு, புதியதாக கட்டித்தர கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக, அகூர் ஊராட்சி தலைவர் சம்பத் மற்றும் பொதுமக்கள் சமீபத்தில், கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: அகூரில் கடந்த, 1962 ம் ஆண்டு, 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. தற்போது இதன் உறுதித் தன்மை குறைந்து விட்ட தால், இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதனால், பழைய தொட்டியை இடித்துவிட்டு, புதியதாக கட்டித்தர வேண்டும். இதேபோல் கடந்த, 1962ம் ஆண்டு அமைக்கப்பட்ட திறந்த வெளி குடிநீர் கிணற்றுக்கு மாற்றாக, கடந்த 2020ம் ஆண்டு, அகூர் பெரிய ஏரியில் கட்டப்பட்டு வரும் திறந்த வெளி கிணறு முடிக்கப்படாமல் உள்ளதால், குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை