உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தரம்சந்த் ஜெயின் பள்ளியில் முப்பெரும் விழா

தரம்சந்த் ஜெயின் பள்ளியில் முப்பெரும் விழா

திண்டிவனம் : திண்டிவனம் அருகே உள்ள கருவம்பாக்கம் ஸ்ரீதரம்சந்த் ஜெயின் பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.பள்ளி வளாகத்தில் மகளிர் தின விழா, மழலைகளுக்கான பட்டமளிப்பு விழா, பேரன்ட் ஓரியண்டேஷன் ஆகிய முப்பெரும் விழா நடந்தது. விழாவில், பெண்களுக்கு சமையல் போட்டி, கோலப்போட்டி, நடன போட்டி, பாட்டு போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.விழாவில், சிறப்பு விருந்தினர் ஏர் இந்தியாவின் பெண் விமானி சோனியா ஜெயின் பரிசு வழங்கிப் பேசினார். குழந்தை நல வல்லுநர் காயத்ரி பாஸ்கர், புதுச்சேரி டாக்டர் விஜயலட்சுமி, பள்ளி தாளாளர் பப்ளாசா, செயலாளர் ஜின்ராஜ், பொருளாளர் நவீன்குமார், நிர்வாக இயக்குனர் அனுராக், பள்ளி முதல்வர் ஜெகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை