உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி திருக்கோவிலுாரில் தி.மு.க., ஆய்வு

 வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி திருக்கோவிலுாரில் தி.மு.க., ஆய்வு

விழுப்புரம்: திருக்கோவிலுார் சட்டசபை தொகுதியில், தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை, மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி ஆய்வு செய்தார். விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், திருக்கோவிலுார் சட்டசபை தொகுதி, தி.கொடியூர் ஊராட்சியில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடக்கிறது. இந்த பணிகளை ஓட்டுச்சாவடி முகவர்கள் மூலம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதசிகாமணி ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஓட்டுச்சாவடி முகவர்களோடு ஆலோசனை நடத்தி, ஒரு வாக்காளர் கூட விடுபடாமல் இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். ஒன்றிய செயலாளர்கள் தீனதயாளன், நகர செயலாளர் கணேசன், தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் தண்டபானி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன், நிர்மல்ராஜ், விவசாய அணி அமைப்பாளர் வெங்கடாசலம், கிளை செயலாளர்கள், தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள், பூத் முகவர்கள், உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை