| ADDED : ஜன 23, 2024 05:07 AM
விழுப்புரம் : முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மீதான பாலியல் மேல்முறையீடு வழக்கில், இறுதிகட்ட வாதம் இன்று நடக்கிறது.தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு, முதல்வர் பாதுகாப்புக்கு காரில் சென்ற பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ்தாசுக்கு, 3 ஆண்டு சிறையும், புகார் அளிக்கச் சென்ற பெண் அதிகாரியின் காரை மறித்த முன்னாள் எஸ்.பி., கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து, கடந்தாண்டு ஜூன் 16ம் தேதி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதனை எதிர்த்து இருவரும், விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கின் விசாரணையை வேறு கோர்ட்டிற்கு மாற்ற வேண்டி, ராஜேஸ்தாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட், வழக்கை வரும் 24ம் தேதிக்குள் விசாரித்து, தீர்ப்பளிக்க உத்தரவிட்டது. அதனையொட்டி ராஜேஸ்தாஸ், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கால் செய்துள்ளார்.இந்நிலையில், விழுப்புரம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி (பொறுப்பு) ஹெர்மிஸ், வழக்கு விசாரணையை இன்று 23ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.