உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயிலம் கல்லுாரியில் இலக்கிய பயிற்சி பாசறை

மயிலம் கல்லுாரியில் இலக்கிய பயிற்சி பாசறை

மயிலம்: மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலைக் அறிவியல் கல்லுாரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இலக்கிய பயிற்சி பாசறை நடந்தது.கல்லுாரி வளாகத்தில் நடந்த பயிற்சி பாசறைக்கு, பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். கல்லுாரி செயலாளர் ராஜிவ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். தமிழ் வளர்ச்சித் துறை ஒருங்கிணைப்பு அலுவலர் ஜெயந்தா நோக்க உரையற்றினார்.நிகழ்ச்சியில், திரைப்பட இயக்குனர் அழகப்பன், கவிஞர் ஜெயந்தா, கலைமகள் மாத இதழ் ஆசிரியர் சுப்ரமணியம், உதயராம், விஜய் கிருஷ்ணன் பேசினர்.தொடர்ந்து மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்களை சொக்கலிங்கம் வழங்கி நிறைவுரையாற்றினார். கல்லுாரி உதவி பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.உதவி பேராசிரியர் சிவசுப்ரமணியம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி