உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தடுப்புச்சுவர் இல்லாத கல்வெர்ட் வாகன ஓட்டிகள் அச்சம்

தடுப்புச்சுவர் இல்லாத கல்வெர்ட் வாகன ஓட்டிகள் அச்சம்

திண்டிவனம்: ஜக்காம்பேட்டையில் கல்வெர்ட்டில் தடுப்பு சுவர் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டை விரிவாக்கம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் சென்று வருவதற்கு, தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலையோரத்தில் கல்வெர்ட் அமைக்கப் பட்டுள்ளது. இந்த கல்வெர்ட்டில் தடுப்புச் சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவ்வபோது விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இரவு நேரங்களில் அச்சத்துடனேயே கடக்கின்றனர். எனவே, கல்வெர்ட்டின் இரு புறமும் தடுப்புச் சுவர் அமைக்க அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை