உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக்கிற்கு தீ வைப்பு போலீஸ் விசாரணை

பைக்கிற்கு தீ வைப்பு போலீஸ் விசாரணை

விழுப்புரம் : விழுப்புரத்தில் அலுவலகத்தில் நிறுத்தி வைத்திருந்த பைக்கிற்கு தீ வைத்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் அடுத்த கோலியனுாரைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் குருநாதன், 39; இவர், விழுப்புரம் கலைஞர் நகர் பகுதியில் உள்ள தனியார் மார்க்கெட்டிங் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 8ம் தேதி இரவு, வழக்கம் போல் தனது பைக்கை அலுவலகத்தின் கீழ் பகுதியில் நிறுத்திவிட்டு, அலுவலகத்தில் இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர், பைக்கிற்கு தீ வைத்துவிட்டு தப்பியோடினர். சிறிது நேரத்தில் அந்த பைக் முழுவதும் எரிந்து சேதமானது. குருநாதன், அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ